பெண்ணை வெட்டியவர் கைது

கோவை, செப்.17:  பேரூர் சென்னனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மனைவி தனலட்சுமி (32). இவரது வீட்டில் பெயிண்டர் கார்த்திகேயன் (29) வாடகைக்கு வசித்து வந்தார். சரியாக வாடகை தராததால் தனலட்சுமி வீட்டை காலி செய்யுமாறு கார்த்திகேயனிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்து விட்டார். தனலட்சுமி வீட்டை காலி செய்யவேண்டும், இல்லாவிட்டால் வீட்டிற்குள் விடமாட்டேன் எனக்கூறியதால் கோபமடைந்த கார்த்திகேயன், அரிவாளால் தனலட்சுமியை வெட்டினார். தடுக்க வந்த தனலட்சுமியின் தாய் துளசியம்மாள், கார்த்திகேயனின் தாய் ராஜாமணி ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: