×

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் எச்சரிக்கை

கோவை, ெசப். 17: தமிழகத்தை ஒட்டிய அண்டை மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட 15 மாவட்டங்கள் எச்சரிக்கை  செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக, தெலங்கான ஆகியவற்றில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக ஏராளமான குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், கோவை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்கள் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பொதுசுகாதாரத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறப்பு குழு அமைத்து டெங்கு கொசுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமியிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை ஆய்வு செய்து, ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வகங்களில் டெங்கு, மலேரியா, எலிக்காய்ச்சல், டைபாய்டு குறித்த டெஸ்ட் செய்ய வேண்டும். காய்ச்சல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். டாக்டர்கள், நர்சுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags : districts ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...