×

திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி டீக்கடை ஊழியர் பலி குளிக்க சென்றபோது பரிதாபம்

திருத்துறைப்பூண்டி, செப்.17: திருத்துறைப்பூண்டி அருகே குளிக்க சென்ற டீக்கடை ஊழியர் குளத்தில் மூழ்கி பலியானார். திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் காதர்உசேன் இவரது மகன் ஜாகீர் உசேன் (45) இவர் டீ கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அங்குள்ள சிவன் கோயில் குளத்தில் குளிக்கச் சென்றார். அப்போது ஆழமான குளத்தில் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த டிஎஸ்பி பழனிச்சாமி , இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் .இதையடுத்து திருத்துறைப்பூண்டி , கோட்டூர், மன்னார் குடியிலிருந்து தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் மூழ்கி இறந்த ஜாகீர் உசேன் உடலை 9 மணி நேரம் தேடலுக்கு பின் மாலையில் உடலை மீட்டனர். பின்னர் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : tea shop employee ,pond ,Tirupathi pondi ,
× RELATED நெல்லையில் கடல் மீன் வரத்து குறைவால் குளத்து மீன்களுக்கு கிராக்கி