மன்னார்குடியில் துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி முகாம்

மன்னார்குடி, செப். 17: நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான திடக் கழிவு மேலாண்மை குறித்து 3 ம் கட்ட பயிற்சி முகாம் மன்னார்குடியில் நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மன்னார் குடி, பட்டுக்கோட்டை நகராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற் பார்வையாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை மற்றும் கை யாளுதல் குறித்து 3 ம் கட்ட பயிற்சி முகாம் மன்னார்குடி நகராட்சி கோ பால சமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற துப்புரவுப் பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு, குப்பைகளை தரம் பிரித்தல், தரம் பிரிக்கப்பட்ட குப் பைகளை கையாளுதல், உரமாக்குதல், மறுசுழற்சிக்கு பயன் படுத்துதல் மற்றும் அபாயகரமான கழிவுகளை பாதுகாப்பாக அப்புற படுத்துதல் குறித்து பயிற்சியளிக்கப் பட்டது.

மேலும் குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை சேகரித்து மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தரம் பிரித்து அந்த பகுதியிலேயே உரமாக்குவது குறித்தும் பயிற்சியளிக்கப் பட்டது.3 ம் கட்டமாக நடைபெறும் இம்முகாமில் மன்னார்குடி நகராட்சியை சேர்ந்த 30 துப்புரவு பணியாளர்களுக்கு 2 நாட்க ளும், பட்டுக்கோட்டை நகராட்சியை சேர்ந்த 30 துப்புரவு பணியாளர்களுக்கு 2 நாட்களும் பயிற்சியளிக்க படுகிறது.
முன்னதாக நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு மன்னார்குடி நகராட்சி ஆணை யர் (பொ) இளங்கோவன் தலைமை வகித்தார். முகாமை நகர் நல அலுவலர் டாக்டர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார். பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற் பார்வையாளர்களுக்கு பட்டுக்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டீபன், மன்னார்குடி நகராட்சி சுகாதார ஆய் வாளர்கள் ராஜேந்திரன், பிரபாகரன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.

Tags : Solid Waste Management Awareness Training Camp for Sanitation Cleaners ,Mannargudi ,
× RELATED திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை