×

மரம் வளர்ப்பு அவசியம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, செப்.17: மரம் வளர்ப்பு அவசியம் குறித்து அரசைவலியுறுத்தியும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: நாளுக்கு நாள் நமது பூமியானது வெப்பமடைந்து வருகிறது. இதனைதடுப்பதற்கு அரசும் மக்களும் இயற்கையை பாதுகாப்பதற்கான முயற்சியில் இறங்குவது மிக அவசியமாகும்.அதோடு கஜா புயலின் பாதிப்பால் நமது பகுதியிலிருந்த லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து போய் விட்டது. இதன் பாதிப்பும் பூமி வெப்பமயமாவதற்கு கூடுதல் வழி வகுத்துள்ளது. குறிப்பாக பூமி வெப்பமயமாவதை தடுப்பதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே மரங்களை புதிதாக வளர்ப்பதற்கு அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்றநிலைமாறி ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற நிலையை மக்கள் உருவாக்க வேண்டும். இன்றைய நிலையில் இயற்கை அழிவை தடுக்க வெப்பத்தை தவிர்க்க முதல் காரணியாக மரம் வளர்ப்பு தான் உள்ளது.

பசுமையாக காட்சியளித்த தென்னை உள்ளிட்ட பல்வேறுமரங்கள் அழிந்து போய்வறண்டபூமியாக காட்சியளிக்கிறது.இப்போதையநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். எனவே கஜா புயலால் இழந்தமரங்களை மீண்டும் உருவாக்கி இயற்கையின் சீற்றத்திலிருந்து மக்களை காப்பதற்கானநடவடிக்கையை அரசு துரிதமாக செய்திட வேண்டும். தொண்டு நிறுவனங்கள், சமூகஆர்வலர்கள், கல்விநிறுவனங்கள், அரசியல் கட்சிகள் அனைவரும் மரம் வளர்ப்பின் அவசியத்தை புரிந்துகொண்டு மரம் வளர்க்கும் பணியில் நாமே முன்முயற்சி எடுத்து செயல்பட வேண்டும். மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.இலவசமாகமரக்கன்றுகளை வழங்குவதற்கு அரசை வற்புறுத்திட வேண்டும்.இந்தகாரியத்தை உறுதியாக நாம் செய்தால்தான் சுனாமி, நிலநடுக்கம், அதிகவெப்பம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து நம்மையும் மக்களையும் பாதுகாக்க முடியும். எனவே மரம் வளர்ப்பின் அவசியத்தை புரிந்துகொண்டு அந்தகடமையைநிறைவேற்றுவதற்கு நாம் பாடுபட வேண்டும் என்றார்.

Tags : Communist ,
× RELATED பத்திரிகை நிறுவனங்களின் நெருக்கடி...