திருத்துறைப்பூண்டியில் சாலையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்

திருத்துறைப்பூண்டி, செப்.17: திருத்துறைப்பூண்டியில் சாலையில் தேங்கியிருந்த மழைநீர் தினகரன் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது.
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மழை நீர் வடிகால் வசதிஏற்படுத்தப்படாததால் நகரிலுள்ள அனைத்து சாலைகளிலும் சிறிது மழை பெய்தாலே மழைநீர் தேங்கிநின்று விடுகிறது.திருத்துறைப்பூண்டி நகரிலுள்ள முத்துப்பேட்டை சாலையில் மழை நீர் தேங்கிநிற்பது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 14ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து நேற்று நெடுஞ்சாலை துறையினர் சாலையில் தேங்கியிருந்த மழைநீரினை வடிவதற்கு வசதியாக சாலை ஓரமாக வாய்க்கால் அமைத்து செப்பனிட்டனர்.பொதுமக்கள்மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்டநாள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுப்பது கண்டு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் நிரந்தரமாக தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : road ,Thirupuraipoondi ,
× RELATED ேதனியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்