×

மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 2 பேருக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்

திருவாரூர், செப். 17: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 2 பேருக்கு பணிநியமன ஆணையினை கலெக்டர் ஆனந்த் வழங்கினார். திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டுதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கல்விக் கடன் வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 270 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் அந்த மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். மேலும் வருவாய் துறையில் பணியின் போது இறந்த 2 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை கலெக்டர் ஆனந்த் வழங்கினார். இதில் டிஆர்ஓ பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Collector ,Meeting ,
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா...