×

5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கண்டித்து அரசு கல்லூரியில் மாணவர் சங்கத்தினர் வகுப்பு புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம்

திருவாரூர்,செப்.17: 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வினை கண்டித்து திருவாரூரில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்திலும் இந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 5 மற்றும் 8ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதற்கு திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த 5 மற்றும் 8 வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு வினை ரத்து செய்யக் கோரி நேற்று திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் இந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில் திருவாரூரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜ், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,Govt ,
× RELATED கால் டாக்சிகள் இயக்குவதற்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்