×

பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

நீடாமங்கலம்,செப்.17: பூவனூர் சாமுண்டீஸ்வரி அமம்மனுக்கு 4ம் ஆண்டுபூச்சொரிதல் விழா நடந்தது. திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ளது பூவனூர் கிராமத்தில் மைசூர் சாமுண்டீஸ்வரிக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் தனி சன்னதியில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கற்பகவல்லி,ராஜராஜேஸ்வரி,சமேத சதுரங்கவல்லபநாதர் சாமிகளும் அருள் பாலித்து வருகின்றனர்.இக்கோயிலில் நேற்று முன்தினம் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு 4ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Flowering Ceremony ,Chamundeswari Amman Temple ,
× RELATED மாசிமக பிரமோற்சவத்தையொட்டி தாய்...