×

உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

மன்னார்குடி, செப். 17: தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு பிரிவின் நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் மன்னார்குடியில் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006ன் படி திருமண மண்டபங்கள் போன்ற சமையல் செய்யப்படும் அனைத்தும் இடங்களும் சமையல் செய்வதற்கான உள் கட்டமைப்பு, புகை வெளியேற்றும் வசதி , சமையல் அறையின் இடவசதி தூய்மை, பெயின்ட் செய்யப்பட்ட கழிவு நீர் வெளியேறும் வசதி, சமையல் பாத்திரங்களின் தன்மை, குடிநீர் தொட்டி தூய்மை, குடிநீர் வசதி ஆகியவற்றை ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படுகிறது.

உரிமம் திருமண மண்டப அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட வேண் டும். இதுவரை உரிமம் பெறாத திருமண மண்டபங்கள் மீது வழக்கு தொடரப்படும். உணவு பாதுகாப்பு ஆணையம் (எப்எஸ்எஸ்ஐ.) உரிமம் இல்லாத திருமண மண்டபங்களில் சமையல் செய்ய வேண்டாம் என பொது மக் களிடம் கேட்டுக் கொள்ளப் படுகிறது.மேலும் விபரங்களுக்கு நியமன அலுவலர், அரசு பழைய மருத்துவமணை வளாகம், மடப்புரம், திருவாரூர் (தொலைபேசி 04366-241034) அல்லது கீழ்கண்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். திருவாரூர் நகரம், திருவாரூர் வட்டாரம் மற்றும் நீடாமங்கலம் வட்டாரம் அன்பழகன் (9443744811), குடவாசல் வட்டாரம் முத்தையா (9443485271), திருத் துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரம் முத்திலியப்பன் (9443914651) , மன்னார்குடி வட்டாரம்,கொரடாச்சேரி மற்றும் கூத்தாநல்லூர் நகராட்சி கிருஷ்ணமூர்த்தி (9486294055), கோட்டூர் வட்டாரம் மற்றும் மன்னார் குடி நகராட்சி மணாழகன் (8608980725) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு