×

பக்தர்கள் குவிந்தனர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு விதை முளைப்புத்திறன் அறிந்து அதிக மகசூல் பெற ஆலோசனை

புதுக்கோட்டை, செப். 17: வேளாண்மையின் உற்பத்திக்கு விதை அடிப்படை இடுபொருளாகும். விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க செய்வதற்காக தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறையின் கீழ் விதைச்சான்றளிப்பு, விதை ஆய்வு, விதைப்பரிசோதனை மற்றும் பயிற்சி ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் விதைப்பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது. விதையின் தரத்தை அறிய விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனையில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு கண்டறியப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இவ்விதை பரிசோதனை நிலையத்தில் சான்று விதை ஆய்ளர் விதை, விவசாயிகளிடமிருந்தும், விதை விற்பனையாளர்களிடமிருந்தும், விதை உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெறப்படும் பணிவிதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


விதைச்சட்டம் 1966 பிரிவு 7( பி)யின் படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்த பட்ச முளைப்புத்திறன் தரம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல் 80 சதவீதம், கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, குதிரைவாளி 75 சதவீதம், வீரிய மக்காச்சோளம் 90 சதவீதம், கத்திரி, தக்காளி, வெங்காயம், கொத்தவரை, கீரை வகைகளுக்கு 70 சதவீதம், உளுந்து, துவரை, பாசிப்பயறு வகைகளுக்கு 75 சதவீதம், மிளகாய், பூசணி, பரங்கி, புடல், பாகல், பீர்க்கன், தர்பூசணி 60 சதவீதம், நிலக்கடலைக்கு 70 சதவிதம், வெண்டை 65 சதவீதம், எள் 80 சதவீதம் என ஒவ்வொரு விவசாயியும் சாகுபடி செய்ய வாங்கும் விதைகளையோ அல்லது தங்கள் கைவசம் உள்ள விதைகளையோ விதைப்பதற்கு முன் முளைப்புத்திறன் அறிய விதைமாதிரிகளை விதைப்பரிசோதனை நிலையத்தில் ரூ.30ஆய்வு கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம் குவியல் எண் ஆகியவை குறித்த விபர சீட்டுடன் நெல் விதை 50 கிராம், உளுந்து பாசிப்பயறு 100 கிராம், மக்காச்சோளம், நிலக்கடலை 500 கிராம், எள், ராகி 25 கிராம், காய்கறிப்பயிர்களான கத்திரி , தக்காளி, மிளகாய் -10 கிராம் ,சுரை, பரங்கி, வௌ்ளரி-100 கிராம், பாகல், புடல்-250 கிராம் ஆகிய அளவில் விதைமாதிரி எடுத்து தங்களது முழு முகவரியுடன் கூடிய கடிதத்துடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி விதையின் முளைப்புத்திறன் அறிந்து தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமாறு விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் சுமித்ராதேவி தெரிவித்துள்ளார்.

Tags : Pilgrims ,Pudukkottai district ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...