×

பெரம்பலூர் நகரில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைபட்ட கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு

பெரம்பலூர்,செப்.17: பெரம்பலூர் நகரில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைபட்டுக் கிடக்கும் கழிவுநீர்வாய்க் கால். தினகரன் செய்தி எதிரொலியால்.சிலமணி நேரங்களில் சுத்தப் படுத்தப்பட் டது.பெரம்பலூர் நகராட்சியில் 13,14வது வார்டுப் பகுக ளில் இருந்து வருகிற கழி வுநீர் வாய்க்கால் ரோவர் வளைவுப் பகுதி பாலத் தின் வழியாகச் செல்கிறது. இந்தக் கழிவுநீர் வாய்க்காலில், பாலத்தின் தென் புறம், 2 மீன்கடைகளுக்கு இடையே தற்போது ஆல மர, அரசமரக் கன்றுகள் ஓடையில் முளைத்துள்ள நிலையில், கழிவுநீரில் அடி த்துவரப்பட்ட குச்சிகள், துணிகள் ஆகியவற்றால் தண்ணீர்செல்லவும் தடை யாக புதர்போல மண்டிக் கிடக்கிறது. இதில் மழைநீரில்அடித்துவரப்பட்ட பொது மக்கள், மீன்கடைக்காரர் கள் பயன்படுத்திய பிளாஸ் டிக் பைகள் எல்லாம் சேர் ந்து குப்பைமேடாகக் காட்சி யளிப்பதோடு மீன்களை சுத்தப்படுத்தும் கழி வுகளா ல் தூர்நாற்றமும் வீசி வருகிறது. இதனை சம்மந்தப்பட்ட நக ராட்சி நிர்வாகம் சுத்தப்படு த்தி, மீன்கடை கழிவுகளை நகருக்குள் கொட்ட வேண் டாமென அறிவுறுத்தி எச்ச ரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோ ள் விடுத்தனர்.

இதுகுறித்த செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளியானது. அதனைப் பார்த்த நகராட்சி ஆணையர்(பொ)ராதா பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, புதர்களை சுத்தப் படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று சிறிதுநேரத்தில் நகராட் சியின் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் முன்னிலை யில் குப்பைகள் அகற்றப் பட்டது. இதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கும் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டிய தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் நன்றிதெரிவித்துக் கொண்டனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...