×

கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி கொண்டு இந்திய தொழிலாளர் கட்சியினர் கருணை மனு அளிக்கும் நூதன போராட்டம்

பெரம்பலூர்,செப்.17: பெரம்பலூரில் இந்தியத் தொழி லாளர் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த வர்கள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொண்டு, குடியரசுத் தலைவருக்கு கலெக்டர் மூலம் கருணை மனு அளிக்கும் நூதனப் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில், கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற் றது. இந்நிலையில் இந்தி யத் தொழிலாளர் கட்சி யின் மாநிலத் தலைவர் ஈஸ்வரன் தலைமையில், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொண்டு, குடியரசுத் தலைவருக்கு கலெக்டர் மூலம் கருணை மனு அளிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய தேசிய தொழிலாளர் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும்.

புதிய தேசிய கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சட்ட ங்களைக் கைவிட வேண் டும். புதிய தேசிய கல்விக் கொள்கை யை திரும்பப் பெற வேண்டும். குறிப்பாக மும் மொழிக் கொள்கை என்பது மிகவும் கண்டன த்துக்குரியது. மத்திய அரசு கட்டாய இந்தி திணிப்பை கைவிட வேண்டும். விவ சாய நகைக் கடன் மானி யம் ரத்து என்பதை திரு ம்பப்பெற வேண்டும். இபி எப், இஎஸ்ஐ திட்டத்தில் பெறப்பட்ட தொழி லாள ர்களின் நிதிகளை உடனே வழங் கிட வேண்டும். ஜிஎ ஸ்டி வரியால் பெறப்பட்ட பல லட்ச ரூபாய் தொகைக ளை மாநில அரசுக்கு திரு ப்பி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூ ரில் இந்திய தொழிலாளர் கட்சியின் மாநிலத் தலை வர் ஈஸ்வரன் தலைமை யில், அக்கட்சியை சேர்ந் தவர்கள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி கொண்டு குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட் டத்தில் இந்திய தொழிலாளர் கட் சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் விஜய குமார், மாவட்டத் தலைவர் சின்ன துரை, மாவட்டச் செயலாளர் ரமேஷ்,

மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சரவணன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட துணைச்செயலா ளர் சதீஸ்குமார், அக்கட்சி யின் தொழிற் சங்கத்தை சேர்ந்த மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, மாவட்டச் செயலாளர் அய்யா சாமி ஆகியோர் மனுகொடுக்க வந்த னர். அப்போது அனைவரும் நூதன மாகத் தங்கள் கழுத்தில் தூக்குமா ட்டிக் கொள்வதுபோல் வந்து கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டுப் பிறகு, இந் தியக் குடியரசுத் தலைவ ருக்கு அளிக்க வேண்டி கலெக்டர் சாந்தாவிடம் கோரி க்கை மனுவைக் கொடுத்து விட்டுச் சென்ற னர்.கழுத்தில் தூக்கு மாட்டிக் கொள்வது போல் மனுகொ டுக் க வந்ததால் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பாகக் காண ப்பட்டது.

Tags : New Workers 'Fight for Pity ,Workers' Party ,Indian ,
× RELATED பாஜவின் ஏமாற்று வேலையை யாரும் நம்ப...