×

செந்துறை பெரிய ஏரியில் பனை விதை நடவு பணி

அரியலூர், செப். 17: செந்துறை பெரிய ஏரியில் பனைவிதை நடவுப்பணி துவங்கியது. அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாரத்தில் செந்துறை மற்றும் சன்னாசிநல்லூர் ஆகிய வருவாய் கிராமங்களில் 1 லட்சம் பனை விதைகளை நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின்கீழ் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி செந்துறை பெரிய ஏரியில் இருபுறமும் பனை விதைகள் நடவு செய்யும் பணியை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

பனை விதைகள் நடுவதற்கு தன்னார்வலர்கள் மற்றும் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் செந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ஜென்சி மற்றும் துணை வேளாண்மை அப்பாவு, அட்மா திட்ட மேலாளர் செந்தில்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவா, உதவி வேளாண்மை அலுவலர் ஒளிச்செல்வி பங்கேற்றனர். செந்துறை பெரிய ஏரியில் நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின்கீழ் பனை விதைகள் நடுவதன் மூலம் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கும் மற்றும் பனைமரத்தின் அனைத்து பாகங்களும் பொதுமக்களுக்கு பயன்படுகின்றது. இந்த மரத்தை கால்நடைகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் சேதப்படுத்துவதில்லை. இந்த மரத்தின் பயன்பாடு 100 ஆண்டுகளாகும்.

Tags : lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு