×

திருமருகலில் பரபரப்பு அச்சு தொழிலை பாதிக்காத வகையில் பேனர் வைக்க விதிமுறையை எளிதாக்க வேண்டும்

சீர்காழி, செப்.17: அச்சு தொழிலை பாதிக்காத வகையில் பேனர்கள் வைக்க விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் என அச்சக உரிமையாளர்கள் வலியுறுத்தப்பட்டது. சீர்காழியில் அச்சக உரிமையாளர்கள் நல சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். செயலாளர் செங்குட்டுவன், பொருளாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். சங்க பொறுப்பாளர் தில்லை.நடராஜன் வரவேற்றார். கூட்டத்தில், அச்சக தொழில் பல ஆயிரம் குடும்பத்தினர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆதலால் டிஜிட்டல் பேனர்கள் அச்சடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை எளிதாக்க வேண்டும், டிஜிட்டல் பேனர்கள் அச்சடிக்கும்போது அனுமதிபெற்ற டிஜிட்டல் பேனர்களை மட்டும் அச்சடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ள விதிமுறையின்படி அனுமதிப்பெற ஊராட்சி, நகராட்சி பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு இரண்டிற்கும் பொதுவாக ஒற்றைசாளர முறையில் ஒரே இடத்தில் எளிதாக பணம் செலுத்தி அனுமதி பெறும் வகையில் தனி அதிகாரிகளை நியமித்து உடனே அனுமதி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிநபர் விமர்சனம், ஜாதி, மத, இனத்திற்கு எதிராகவும், தேச ஒற்றுமைக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் யாரேனும் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க ஆர்டர் தந்தாலும் எந்த அச்சகத்தினரும் அவ்வாறு நோட்டீஸ் அச்சடிக்ககூடாது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அச்சக உரிமையாளர்கள் முத்தையன், சிவகுருநாதன், கணபதி, சரவணன், விஜயன், உத்திராபதி, சுந்தர், ராஜேஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் ராஜா நன்றி கூறினார்.

Tags : area ,Tirumarukal ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...