×

சீர்வரிசை வழங்கி வரவேற்பு கடைக்கு தண்ணீர் கேட்ட தகராறு கடை உரிமையாளருக்கு அடி, உதை

மயிலாடுதுறை செப்.17: கடைக்கு தண்ணீர் கேட்ட தகராறில் கடப்பாக்கல் கடை உரிமையாளருக்கு பாறை அடி விழுந்தது.மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் அஞ்சாறு வார்த்தலை மெயின் ரோடு பகுதியில் கடப்பாக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் ராமகிருஷ்ணன் மகன் சுதாகர் (36).நேற்று முன்தினம் மாலையில் இவர் கடைக்கு அருகில் தள்ளுவண்டியில் பிரியாணி விற்பனை கடை ஒன்றை வில்லியநல்லூர் சிவகொழுந்து மகன் அஜித் என்பவர் கொண்டு வந்து நிறுத்தி விட்டு குடத்தில் தண்ணீர் கேட்டுள்ளார். கடப்பாக்கல் கடை உரிமையாளர் தன்னிடம் நல்ல நீர் இல்லை என்று கூறினார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆணிபிடுங்கும் பாறையை எடுத்து சுதாகரை தாக்கியதுடன். கடையில் இருந்த கடியூப்லைட்டை உடைத்து கட்டப்பா கற்களையும் சேதப்படுத்தி விட்டனர். இதில் பாலச்சந்திரன் மகன் பாரதியும் ஈடுபட்டுள்ளார். காயமடைந்த சுதாகர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் மற்றும் பாரதியை தேடி வருகின்றனர்.

Tags : owner ,dispute shop ,dressing room ,
× RELATED ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர்...