×

சீராளன் குளம் தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தம்

நாகை,செப்.17:சீராளன் குளம் தூர்வாருவது பாதியில் நிறுத்தப்பட்டதால், உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் தூர்வாரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். திருமருகல் அருகே சீராளன் குளத்தை தூர் வார கோரி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகை தாசில்தார் மூலம் சீராளன் குளம் தூர்வார 2 முறை அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 2 முறையும் தடுத்து நிறுத்தப்பட்டது. 3 வது முறையாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சீராளன் குளத்தின் கரையை கட்டி கொண்டிருந்தோம். அப்போது நாகை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் தனது சகோதரரரை அழைத்து கொண்டு வந்து 100 லோடு மண் கேட்டனர்.

மேலும், நான் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். எனவே எனக்கு இலவசமாக மண் கொடுக்க வேண்டும், அதற்கு நாங்கள் தாசில்தாரிடம் அனுமதி வாங்கி குளத்தை தூர்வாருகிறோம். இலவசமாக மண் கொடுக்க முடியாது என்று கூறினோம். அதற்கு அவர் மண் கொடுக்கவில்லை என்றால் குளம் தூர்வாருவதை நிறுத்தி விடுவேன் என்று கூறினார். மறுநாள் சப்-கலெக்டரிடம் தவறாக கூறி அவர்களது உறவினர்களை வைத்து குளம் தூர்வாருவதை நிறுத்தி விட்டார். எனவே சீராளன் குளம் தூர் வாராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சீராளன் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : cemetery pond ,stop ,
× RELATED போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க கோரி...