தொழிலாளர் சங்கத்தினர் கண்டன கூட்டம்

பாபநாசம் செப் 17: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 16 மாத காலமாக சம்பளம் வழங்கப் படவில்லை. இதைக் கண்டிக்கும் விதமாக திருஆரூரான் சுகர்ஸ் நேஷனல் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆலை நுழை வாயிலின் முன்பாக கண்டன கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் இளவரி, பொதுச் செயலாளர் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான தொழிலாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். திருஆரூரான் சர்க்கரை ஆலை இரண்டாம் பிரிவைச் சேர்ந்த பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: