×

10 கி.மீ. தூர சாலையில் 2,000 மரக்கன்றுகளை நட்டு பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் சாதனை

பட்டுக்கோட்டை, செப்.17: கஜா புயலில் இழந்த மரங்களை மீட்போம் என்ற அடிப்படையிலும், மரம் வளர்ப்பை வலியுறுத்தியும் பட்டுக்கோட்டை அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் 1,300க்கும் மேற்பட்டோர் மற்றும் அவர்களது பெற்றோர் இணைந்து அதிராம்பட்டினத்தில் இருந்து சேண்டாக்கோட்டை வரை 10 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறங்களிலும் 2,000 மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவை பட்டுக்கோட்டை எம்எல்ஏ சேகர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். தாளாளர் சுப்பிரமணியன், முதல்வர் ரகுபதி முன்னிலை வகித்தனர். முன்னாள் தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் மலைஅய்யன், முன்னாள் பி.ஏ.பி.சி.எம்.எஸ். தலைவர் சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் பிச்சை, பட்டுக்கோட்டை குயின் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் முத்துக்குமார், செம்பாளூர் ஓம் சக்தி முத்துவேல், சமூக ஆர்வலர் விவேகானந்தம், அதிராம்பட்டினம் கல்லூரி பேராசிரியர் செய்யது அகமதுகபீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் சுப்பையன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : School Students ,CBSE ,Far Road ,
× RELATED மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச்...