மூலாழ்வாஞ்சேரி வாய்க்கால் வறண்டு கிடக்கும் அவலம்

பாபநாசம், செப். 17: காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும் மூலாழ்வாஞ்சேரி வாய்க்கால் வறண்டு காணப்படுகிறது. பாபநாசம் அருகே உள்ளது உத்தமதானபுரம். இந்த ஊர் தமிழ் தாத்தா உவேசா பிறந்த மண். இந்த ஊர் வழியாக மூலாழ்வாஞ்சேரி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் தலைப்பு குடமுருட்டி யில் உள்ளது. இந்த வாய்க்கால் வழியாக செல்லும் நீரை நம்பி மணக்கோடு, உத்தமதானபுரம், அன்னுக்குடி, களஞ்சேரி, சாலபோகம், கோட்டைச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 1,000 ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் கடலில் கலந்து வருகிறது. ஆனால் இந்த வாய்க்காலில் சொட்டு தண்ணீர் கூட வரவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் இந்த வாய்க்கால் நீரை நம்பியுள்ள விவசாயிகள் மனவேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், மூலாழ்வாஞ்சேரி வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. இந்த வாய்க்காலின் தலைப்பு குடமுருட்டியில் உள்ளது. மெயின் வாய்க்காலில் தண்ணீர் வராததால் கிளை வாய்க்காலிலும் தண்ணீர் வரவில்லை. கிளை வாய்க்காலின் தலைப்பு மாலாபுரத்தில் உள்ளது. கடைமடை வரை தண்ணீர் பாய்கின்றது என்கின்றனர் ஆளுந்தரப்பினர். எங்கே பாய்கிறது என்பது தான் தெரியவில்லை. இந்த வாய்க்கால் தூர்வாரப்படவும் இல்லை. காவிரியில் தண்ணீர் கரையை தொட்டப்படி சென்றாலும் எங்களுக்கு ஒரு பயனும் இல்லை என்றனர்.

Related Stories: