ஒரத்தநாடு, திருவோணம் வேளாண் அலுவலகத்தில் ஆளும்கட்சி குழு அமைத்து மானிய தொகை கொள்ளை

ஒரத்தநாடு, செப். 17: ஒரத்தநாடு, திருவோணம் வேளாண்துறை அலுவலகங்களில் ஆளும்கட்சி குழு அமைத்து மானிய தொகைகள் கொள்ளையடித்து வருவதாக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட துணை செயலாளரான இடையங்காடு வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம் அரசு வேளாண் உதவி இயக்குனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் கோட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், விதைகள், உரங்கள், வேளாண் கருவிகள், மானியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய விவசாயிகளுக்கான சலுகைகளை திருவோணம், ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நேரடியாக வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கப்படாமல் ஆளும்கட்சியை சேர்ந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குழுக்களாக அமைக்கப்பட்ட வேளாண் குழுவை கையில் வைத்து கொண்டு வேளாண் அதிகாரிகள் கொள்ளையடித்து வருகின்றனர். அரசின் சலுகைகளை விவசாயிகளுக்கு தெரியபடுத்துவதில்லை.

Advertising
Advertising

இதுகுறித்து தஞ்சை கலெக்டரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆத்மா திட்டத்தை முறைகேடாக பயன்படுத்துதை தவிர்க்க அனைத்து விவசாயிகளின் சங்கங்களின் உறுப்பினர்களையும், சர்வகட்சி பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆளும்கட்சியும் குழுக்களை மாற்றி திருத்தி அமைத்து அனைத்து விவசாயிகளும் பயன்படும் வகையில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: