அதிராம்பட்டினம் பகுதியில் பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்

அதிராம்பட்டினம், செப். 17: அதிராம்பட்டினத்தில் அங்காங்கு வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அதிரடியாக அகற்றினர். மேலும் இதுதொடர்பாக அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் பிளக்ஸ் போர்டு தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை உத்தரவு வந்துள்ளதை அடுத்து உடனடியாக தங்கள் நிறுவனங்களில் பிளக்ஸ் பேனர்கள் தயாரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.மேலும் பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ப்ளாஸன் புஷ்பராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்றினர்.

அதிராம்பட்டினம் நகர்ப்பகுதியில் பேரூராட்சி ஊழியர்கள் பிளக்ஸ் போர்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு நகர் முழுவதும் எந்த பகுதியிலாவது பிளக்ஸ் போர்டுகள் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: