மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, செப். 17: ஐந்தாம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவர் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் சுதந்திரபாரதி தலைமை வகித்தார். கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு என்பது கிராமப்புற பல்லாயிரக் கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கனவு பாதிக்கப்படும். எனவே கல்வி அமைச்சர் அறிவித்துள்ள பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

Advertising
Advertising

அரசாணையை திரும்ப பெற வேண்டும். கிராமப்புற, நகர்ப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகள் தரத்தை உயர்த்தி போதுமான ஆசிரியர்களை நியமித்து ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசு செலவிலேயே கல்வியை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மாணவர் பெருமன்ற மாநில துணைத்தலைவர் முகில், மாணவர் பெருமன்ற தஞ்சை மாவட்ட செயலாளர் செந்தூர்நாதன், மாவட்ட நிர்வாகிகள் சங்கர், தங்கமணி, ஆதி, ஜான்வின்சென்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: