×

கரூர் சின்ன ஆண்டாங்கோயிலில் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி

கரூர், செப். 17: குப்பைக்கு தீ வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் அருகே உள்ள சின்னஆண்டாங்கோயில் இரட்டை வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. ஒரு காலத்தில் பாசன வாய்க்காலாக இருந்த இந்த வாய்க்கால் தற்போது கழிவு கொட்டும் இடமாக மாறிவிட்டது. காய்ந்த குப்பைகள் அடிக்கடி தீப்பிடித்து எரிகின்றன, இதனை பொதுமக்கள் அணைத்து வருகின்றனர். அடிக்கடி இவ்வாறு இப்பகுதியில் குப்பைகள் தீப்பிடித்து எரிகின்றன. உள்ளாட்சி அதிகாரிகளிடம் பலமுறை இதுகுறித்து முறையிட்டுள்ளோம். உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும். வாய்க்காலில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : public ,burning ,Karur ,
× RELATED கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள்...