×

குளித்தலை பகுதியில் தொடர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

குளித்தலை, செப். 17: குளித்தலை பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை சுமார் 5000 ஏக்கர் அளவிற்கு பயிரிட்டு வந்தனர். கடந்த 5 வருடமாக பருவமழை சரியாக பெய்யாத காரணத்தினால் விவசாயிகள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் காவிரியில் கிடைத்த நீரைக்கொண்டு ஓரளவே பயிரிட நேரிட்டது. விவசாயிகள் இந்த வருடமாவது மழை பெய்யுமா என்று ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்ததால் உபரி நீரை திறந்து விட்ட நிலையில் ஆங்காங்கே விவசாயிகள் பயிர்களை நட தயாராகி விட்டனர். மேலும் விவசாயத்திற்கான தண்ணீர் தேவை என காத்துக் கொண்டிருந்த நிலையில் குளித்தலை பகுதியில் மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குளித்தலை பகுதியை சுற்றி உள்ள கிராம பகுதியில் இருக்கும் குளம் குட்டைகளில் ஆங்காங்கே நீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : bathing area ,
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்