×

கரூர் பைபாஸ் சாலை சுக்காலியூரில் சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்

கரூர், செப். 17: கரூர் பைபாஸ் சாலை சுக்காலியூரில் சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூரில் இருந்து என்எச் 67 சாலை சுக்காலியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 7 உடன் இணைகிறது. திருச்சி- கோவை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் சாலையோரம் பார்க்கிங் செய்யப்படுகிறது. லாரிகள் டிரக்குகள் போன்றவற்றை சாலையோரம் நிறுத்துவதால் இந்த இடத்தில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஆங்காங்கே பழுது பார்ப்பதற்காகவும், உணவு அருந்துவதற்காகவும், இளைப்பாறுவதற்காகவும் கனரக வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். வாகன போக்குவரத்து மிகுந்த சாலை இது என்பதால் பின்னல் வரும் வாகனங்கள் அருகில் வந்ததும் வேகத்தை குறைத்து மெதுவாக சென்று வருகின்றன. விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : road accident ,Karur Bypass Road Sukkaliyur ,
× RELATED சாலை விபத்தில் மருத்துவர் பலி