கரூர்- கோவை சாலையில் போட்டி போட்டு செல்வதால் முட்டி மோதும் வாகனங்கள்

கரூர், செப். 17: கரூர்- கோவை சாலையில் வாகனங்கள் போட்டிபோட்டு செல்வதால் முட்டிமோதுகின்றன. கரூர் கோவை சாலையில் 80 அடி சாலையில் இருந்தும், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இருந்தும் வரும் வாகனங்கள் சாலையை கடக்கின்றன. கோவை சாலையில் ஏற்கனவே வாகனங்கள் வந்து செல்லும் சாலையில் குறுக்கே வாகனங்கள் போட்டி போட்டு செல்கின்றன. இந்த இடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கும்போது கட்டுப்படுத்தி அனுப்புகின்றனர். போலீசார் இல்லாத சமயங்களில் வாகனங்கள் போட்டி போட்டி செல்கின்றன. இதனால் எதிரில் வருவோர் தடுமாறுகின்றனர். வாகனங்கள் அடிக்கடி இப்பகுதியில் முட்டி மோதிக்கொள்கின்றன.

Tags : road ,Karur ,Coimbatore ,
× RELATED ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன விதி...