×

கரூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை உயர்வு

கரூர், செப். 17: சின்னவெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. கரூர் மாவட்டம் ஈசநத்தம் பகுதியில் நந்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. சின்ன வெங்காயத்தை வாரச்சந்தைகள் மற்றும் வேன்களில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்தும் வரத்து அதிகமாக உள்ளது. உழவர் சந்தைகளில் நேற்று கிலோ ரூ.40க்கு விற்பனையானது. கடைகளில் ரூ.55 முதல் ரூ.65 வரை விற்கின்றனர். சின்னவெங்காயத்திற்கு போதுமான கொள்முதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கரூரில் பல இடங்களிலும் வேன்களில் வைத்து விற்பனை செய்கின்றனர். மூன்று கிலோ ரூ.100க்கு விற்பனை செய்கின்றனர்.

Tags : Karur district ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்