×

கரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் தொடர் மழை

கரூர், செப். 17: கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 346.90 மிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வெப்பசலனம் காரணமாக கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும் இரவில் பெய்யும் மழையின் காரணமாக சீதோஷ்ணநிலை மாறியுள்ளது.

இதனடிப்படையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கரூர் 39 மிமீ, அரவக்குறிச்சி 14 மிமீ, அணைப்பாளையம் 7 மிமீ, க.பரமத்தி 24 மிமீ, குளித்தலை 7 மிமீ, தோகைமலை 8.4 மிமீ, கிருஷ்ணராயபுரம் 31 மிமீ, மாயனூர் 34மிமீ, பஞ்சப்பட்டி 40 மிமீ, கடவூர் 15.2 மிமீ, பாலவிடுதி 62.3 மிமீ, மயிலம்பட்டி 65 மிமீ என மாவட்டம் முழுவதும் 346.90 மிமீட்டர் மழை பொழிந்துள்ளது. இதன் மொத்த சராசரி 28.91 ஆகும். அதிகபட்சமாக மயிலம்பட்டியில் 65 மிமீட்டரும், குறைந்தபட்சம் அணைப்பாளையம் மற்றும் குளித்தலையில் 7 மிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Showers ,district ,Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...