வியாசா கல்லூரியில் போஷான் அபியான் திட்ட கருத்தரங்கு

நெல்லை, செப். 17: புளியங்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் ‘போஷான் அபியான் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்’ குறித்த கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் சக்திவேல்ராணி முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவியர் தலைவி ஹீராஜான் வரவேற்றார். தொடர்ந்து குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் தங்கம்மாள் பேசுகையில், ‘பிரதமரின் அறிக்கையின் படி ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை களைய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்’ என்றார். கருத்தரங்கின் மூலம் கல்லூரி மாணவியர் தமக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகள் பற்றியும், அதன் மூலம் பெரும் பயன் குறித்தும் விளக்கினர். மேலும் ஊட்டச்சத்து நிறைந்த கீரை வகைகள், சிறுதானிய வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு அதன் மூலம் மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கருத்தரங்க ஏற்பாடுகளை திட்ட சூபர்வைசர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர். மாணவியர் உபதலைவி அகிலாராணி நன்றி கூறினார்.

Related Stories: