இதுகுறித்து வி.கே.புரம் எஸ்ஐ மணிகண்டன் வழக்கு பதிந்து தலைமறைவான வேல்கனியை தேடி வருகிறார். பழையாறு மிஷன் அணைக்கட்டில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வர ரூ.160 கோடியில் திட்டம்

பணகுடி, செப். 17: பழையாறு மிஷன் அணைக்கட்டில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொண்டு வருவதற்கு ரூ.160 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் இன்பதுரை தெரிவித்தார்.  

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலுகா, தாமரைக்குளம் கிராமம், பழையாற்றில் மிஷன் அணை உள்ளது. இதனை சட்டமன்ற உறுதிமொழிக் குழு தலைவர் இன்பதுரை எம்எல்ஏ பார்வையிட்டார். அப்போது நெல்லை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பத்மா, உதவி செயற்பொறியாளர் அர்ஜூனன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் இன்பதுரை எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: சிற்றாறு பட்டண கால்வாய் என்றழைக்கப்படும் ராதாபுரம் கால்வாய்க்கு காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1970ம் ஆண்டில் இருந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போதுவரை நடைமுறையில் உள்ளது.கடந்த சட்டமன்ற கூட்டத்தில், ராதாபுரம் கால்வாய்க்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது குறித்து பேசினேன்.  அதுகுறித்து தனிப்பட்ட முறையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். அத்திட்ட மாதிரி தயாரிப்பு பணிக்கு ரூ.2 கோடி நிதியும் ஒதுக்கினார். கன்னியாகுமரி பழையாற்றில் இருந்து மணக்குடி வழியாக கடலில் சுமார் 922 மில்லியன் கன அடி தண்ணீர் கடலில் கலக்கிறது. இதனை பெரிய பம்பிங் ஸ்டேஷன்கள் மூலம் நிலப்பாறை வழியாக வரும் ராதாபுரம் கால்வாய்க்கு திருப்பி விடுவதற்கான திட்ட மதிப்பீடு ரூ.160 கோடிக்கு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் சுமார் 52 குளங்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். இதனால் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன் ராதாபுரம் பகுதியில் உள்ள கருங்குளம், லெவிஞ்சிபுரம், அழகநேரி, தனக்கர்குளம், கூடங்குளம், பரமேஸ்வரபுரம், ராதாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம், குடிநீர் பிரச்னை நிரந்தர தீர்வு கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

இதன் மூலம் ராதாபுரம், வறட்சியான பகுதி என்ற பிம்பம் மாறி செழிப்பான பகுதியாக விரைவில் மாறும். மேலும் இத்திட்டத்தின் மூலம் ராதாபுரம் கால்வாய்க்கு தடையின்றி தண்ணீர் வரும் என்பதிலும் ஐயமில்லை. இந்த திட்டம் இந்தாண்டு இறுதியில் தொடங்கும்.

பழையாற்றில் இருந்து பெரிய ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும் போது தென்தாமரைகுளத்தில் உள்ள திருவனந்தபுரம் - கன்னியாகுமரி சாலை வழியாக செல்ல உள்ளதால் அதில் எவ்வாறு கொண்டு செல்வது என அதிகாரிகள் மட்டத்தில் பேசி அதிலும் மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டு செல்லப்படும், என்றார்.அதிமுக வள்ளியூர் ஒன்றிய செயலாளர் அழகானந்தம், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோனி அமலராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை, அரசு வழக்கறிஞர் கல்யாணகுமார், பணகுடி ஜெ. பேரவை பொருளாளர் ஜோபி.ஜெகன், வள்ளியூர் நகர துணை செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பணகுடி ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: