தென்காசி மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா

தென்காசி, செப். 17: தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா, வருகிற 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 28ம் தேதி அதிதூதரின் தேர் பவனி நடக்கிறது. தென்காசி புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயத்தில், ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா, வருகிற 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியை தக்கலை மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை வகித்து கொடியேற்றுகிறார். அகரக்கட்டு பங்கு பணியாளர் எட்வின்ராஜ், பாளை. மறைமாவட்ட செயலக முதல்வர் அந்தோணி குரூஸ், தூத்துக்குடி ஜெரோசின், கருத்தப்பிள்ளையூர் பங்கு பணியாளர் அந்தோணிவியாகப்பன் திருப்பலி நடத்துகின்றனர். 21ம் தேதி நெட்டூர் குருமட அதிபர் ராஜதேவன் தலைமையில் செங்கோட்டை பங்குபணியாளர் ப்ளேஸ் மறையுரை, கடையம் பங்கு பணியாளர் அருள்தினேஷ் நற்கருணை ஆசீர், 22ம் தேதி சேர்ந்தமரம் பங்கு பணியாளர் அந்தோணிசாமி தலைமையில் வண்டானம் பங்கு பணியாளர் அருள்நேசமணி நற்கருணை ஆசீர், கோவில்பட்டி உதவி பங்குத்தந்தை அருள்அந்தோணிமிக்கல் மறையுரை, 23ம் தேதி மேலஇலந்தைக்குளம் பங்கு பணியாளர் ஜீவா தலைமையில் சங்கர்நகர் பங்கு பணியாளர் ஜோசப்ராஜ் மறையுரை, காமநாயக்கன்பட்டி உதவி பங்குத்தந்தை அல்போன்ஸ் நற்கருணை ஆசீர், 24ம் தேதி சாந்திநகர் பங்கு பணியாளர் ஜேம்ஸ் தலைமையில் பாளை கல்விப்பணிக்குழு இயக்குநர் வியாகப்பராஜ் மறையுரை, பாளை மேய்ப்பு பணி நிலைய இயக்குநர் ஞானப்பிரகாசம் நற்கருணை ஆசீர், 25 தேதி திருச்சி தூயபவுல் குருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஜூவராஜ் தலைமையில் நெடுங்குளம் பங்கு பணியாளர் ஜான்சன்ராஜ் மறையுரை, கொம்பாடி பங்கு பணியாளர் சந்தனலாசர் நற்கருணை ஆசீர், 26ம் தேதி உடையார்பட்டி இருதயநகர் பங்குபணியாளர் ஜோமிக்ஸ் தலைமையில், ஜவஹர்நகர் பங்கு பணியாளர் அருள்அம்புரோஸ் மறையுரை, சிதம்பராபுரம் பங்கு பணியாளர் பீற்றர் நற்கருணை ஆசீர் நடத்துகின்றனர்.27ம் தேதி காலை 6 மணிக்கு கும்பகோணம் அருளப்பன் தலைமையில் மறையுரை, 10 மணிக்கு பாட்டாக்குறிச்சி குருமடம் ஆண்டனி வர்க்கீஸ்ரோச்சா தலைமையில் மறையுரை, மலையாள திருப்பலி, மாலை 6 மணிக்கு மேலமெஞ்ஞானபுரம் பங்கு பணியாளர் குழந்தைராஜ் தலைமையில் பாளை. ஆயர் இல்லம் லூர்துராஜ் மறையுரை, ஆவுடையானூர் பங்கு பணியாளர் தேவராஜன் நற்கருணை கதிர்பாத்திரம் தாங்குகிறார். வல்லம் பங்கு பணியாளர் ஆரோக்கியராஜ் நற்கருணை ஆசீர்,  நற்கருணை பவனி நடக்கிறது. 28ம் தேதி மதியம் 12 மணிக்கு பாட்டாக்குறிச்சி குருமட அதிபர் ரினோய்கட்டிப்பரம்பில் தலைமையில் மறையுரை, மாலையில் பாளை புனித சவேரியார் கலைமனைகள் அதிபர் ஹென்றி ஜெரோம் தலைமையில் மறையுரை நடத்துகிறார். சென்னை உயர்படிப்பு தீபக்மைக்கேல்ராஜா தேரை அர்ச்சிக்கிறார், இரவில் அதிதூதரின் தேர் பவனி நடக்கிறது.

29ம் தேதி காலை 4.30 மணிக்கு கர்நாடகா குல்பர்க்கா மறைமாவட்டம் அந்தோணிசெல்வம் தலைமையில் புனே செல்வராஜ் மறையுரை, 5.45 மணிக்கு பாளை மறைமாவட்ட தொடர்பாளர் சேவியர்டெரன்ஸ் தலைமையில் மறையுரை, 7.30 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்டம் முன்னாள் மேயர் சின்னப்பா தலைமையில் மறையுரை, 9.30 மணிக்கு புனலூர் மறைமாவட்ட முதன்மை குரு வின்சென்ட் டிக்ருஸ் தலைமையில் கேரள திருப்பலி,  12 மணிக்கு தூத்துக்குடி ஜோசப் தலைமையில் குணமளிக்கும் நற்கருணை வழிபாட்டு திருப்பலி, மாலை 6 மணிக்கு மின்நகர் அமல்ராஜ், புளியங்குடி அருள்ராஜ் தலைமையில் மார்ட்டின் மறையுரை, நடத்துகின்றனர். 30ம் தேதி ஜோசப் தலைமையில் சுந்தர் மறையுரை நடத்தி கொடியிறக்கம் நடக்கிறது.ஏற்பாடுகளை புனிதமிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை சகாயசின்னப்பன், உதவிபங்குதந்தை லூர்துமரியசுதன், அமலவை அருட்சகோதரிகள், பங்கு பேரவை, அன்பிய இறைசமூகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: