நாசரேத்தில் பெந்தெகொஸ்தே சபை மக்கள் பிரமாண்ட பேரணி

நாசரேத், செப். 17: நாசரேத்தில் பெந்தெகொஸ்தே சபை மக்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர். நாசரேத் அடுத்த மூக்குப்பீறி- பெத்தானியாநகர் பெந்தெகொஸ்தே சபை சார்பில் விசேஷித்த வேதபாடக் கூட்டங்களும், தெய்வீக சுகமளிக்கும் ஆராதனை நேற்று (16ம் தேதி) துவங்கியது. தொடர்ந்து 19ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்த நாசரேத்தில் நடந்த கிறிஸ்தவர்களின் பிரமாண்ட பேரணியை தலைமை வகித்த  சபை பாஸ்டர் ஏசுதாஸ் ஜெபித்து துவக்கிவைத்தார். சபை வளாகத்தில் துவங்கிய இப்பேரணி மூக்குப்பீறி, பிரகாசபுரம், நாசரேத் கே.வி.கே. சாமி சிலை, பஸ் நிலையம், தபால் நிலையம், மோசஸ் தெரு வழியாக சென்று மீண்டும் சபையை வந்தடைந்தது.  இதில் சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், முதலூர், மூக்குப்பீறி மற்றும் சுற்று வட்டார பெந்தெகொஸ்தே சபையினர், கிறிஸ்தவர்கள் என திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சபை பாஸ்டர் ஏசுதாஸ் தலைமையில் சபை விசுவாசிகள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: