கார் மோதி மாணவர் காயம்

திருச்செந்தூர், செப். 17:  பரமன்குறிச்சி அருகேயுள்ள வெள்ளாளன்விளை, சுதந்திர நகரை சேர்ந்தவர் நிஷாந்த் சபாபதி (18).  திருச்செந்தூரில் இயங்கும் கல்லூரியில் படித்து வரும் இவர், தினமும் வெள்ளாளன்விளையிலில் இருந்து பஸ்சில் திருச்செந்தூர் வந்து அங்கிருந்து கல்லூரிக்கு நடந்துசெல்வது வழக்கம்.     நேற்று முன்தினம் இதே போல் கல்லூரி வந்த அவர், பின்னர் வகுப்புகள் முடிந்து பஸ்நிலையத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து அதிவேகமாக வந்த  கார், இவரது மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: