ஏரலில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை

ஏரல்,  செப். 17:  வைகுண்டம் கிழக்கு ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  ஏரலில் நடந்தது. ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் வளாகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச்செயலாளர் பிரபாகர் முன்னிலை வகித்தார். மாநில  துணைத்தலைவர் ஜெயக்குமார், கோட்டச் செயலாளர் சக்திவேலன் சிறப்புரையாற்றினர். இதில் பண்டாரவிளை கிளைத் தலைவராக முருகேசன்,  சூளைவாய்க்கால்  கிளைத் தலைவராக இசக்கி, சாயர்புரம் நகர பொறுப்பாளராக பின்னி,  அகரம் கிளைத் தலைவராக பெரியசாமி, ஏரல் வார்டு பொறுப்பாளராக விமல்  பிரேம்குமார் தேர்வுசெய்யப்பட்டனர். கூட்டத்தில் ஏரல்  பொறுப்பாளர்கள் சிவராமன், பாலாஜி, பட்டுத்துறை, ராமராஜன், பாக்யராஜ் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: