வட்டார தடகள போட்டி மங்களகிரி பள்ளி மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை, செப். 17:  வட்டார தடகள போட்டியில் புதுக்கோட்டை அடுத்த  மங்களகிரி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். சாயர்புரம் வட்டார அளவிலான தடகளபோட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பங்கேற்ற புதுக்கோட்டை அடுத்த மங்களகிரி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் ஜூனியர் பிரிவில் நீளம் தாண்டுதலில் விஷ்வா முதலிடம் வென்றார். குண்டு எறிதலில் 2ம்  இடமும், 80 மீட்டர் தடை ஓட்டத்தில் சில்வியாகிரேசி 2ம்  இடமும், சீனியர் பிரிவில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் சௌத்துரிராம் முதலிடமும் வென்றனர். 800 மீட்டர் ஓட்டத்தில் சிவா 2ம்  இடமும், 1500 மீட்டர் ஓட்டத்தில் உலகநாதன் முதலிடமும் வென்றார்.

Advertising
Advertising

 இதே போல் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில்  ஜோசுவா 2ம்  இடமும், ஈட்டி எறிதலில் சௌத்துரிராம் முதலிடமும், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் திருநிஷா முதலிடமும்,  சூப்பர் சீனியர் பிரிவில் 1500 மீட்டர் ஓட்டத்தில் பேச்சிமுத்து முதலிடமும் வென்றனர்.

 சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துராஜா, பிரியா, கிளாட்வின் உள்ளிட்டோரையும் பள்ளி முதல்வரும், தாளாளருமான பங்குத்தந்தை ரூபட், உதவித் தலைமை ஆசிரியர் சாந்தி, நிர்வாக அலுவலர் நிர்மல்ராணி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.

Related Stories: