நாசரேத் கல்லூரியில் இருபெரும் விழா

நாசரேத், செப். 17: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா, முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு விழா என இருபெரும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்தார். பேரா. ஜூலியட் ஹில்டா ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவி நிஷா ஜெபமலர் வேதபாடம் வாசித்தார். மாணவிகள் பாடல்கள் பாடினர். மாணவி தனலட்சுமி வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் அந்தோணி செல்வகுமார் வாழ்த்திப் பேசினார். இதையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவி நந்தினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பல்கலைக்கழகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. மாணவி ராமலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரிச் செயலாளர் எஸ்.டி.கே ராஜன், முதல்வர் அருள்ராஜ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: