×

பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

தூத்துக்குடி, செப். 17: தூத்துக்குடியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ பேசினார். தூத்துக்குடி  ஸ்டேட் பாங்க் காலனி சக்திவிநாயகர்புரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ் தலைமை வகித்தார். தெற்கு பகுதி  செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி நிர்வாகிகள் அந்தோணி, செல்வராஜ், கோகிலா,  தமிழரசி, சாந்தி, வக்கீல் முனியசாமி  முன்னிலை வகித்தனர். முன்னாள்  மாநகரச் செயலாளர் ஏசாதுரை வரவேற்றார். கூட்டத்தில் தெற்கு  மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் எம்எல்.ஏ., தூத்துக்குடி ஆவின்  சேர்மன் சின்னத்துரை, தலைமைக்கழக பேச்சாளர்கள் மதுரை வெடி சண்முகம்,  நடராஜன்  சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சண்முகநாதன் எம்.எல்.ஏ பேசுகையில், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா, சவுதி  அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று தமிழ்நாட்டின் தொழில் துவங்க ஏதுவாக  உள்ள சூழலை எடுத்துரைத்து பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு  ஒப்பந்தமிட்டு முதலீடுகளை ஈர்த்து சாதனை மேற்கொண்டுள்ளார். இதனால்  பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.  அனைவரிடத்திலும் எளிமையான முதல்வர் என பெயரெடுத்துள்ளார்’’ என்றார்.

 கூட்டத்தில்  முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட மத்திய கூட்டுறவு  வங்கி தலைவர் சுதாகர், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர்  பெருமாள்சாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் டேக் ராஜா, மருத்துவ அணி  செயலாளர் டாக்டர் ராஜசேகர், மேற்கு பகுதி செயலாளர் முருகன், சிவத்தையாபுரம்  குணசேகரன், முள்ளக்காடு செல்வக்குமார், மாவட்ட அரசு வக்கீல் சுகந்தன்  ஆதித்தன், அரசு கூடுதல் வக்கீல் கோமதி மணிகண்டன், எம்.ஜி.ஆர்.  மன்ற மாவட்ட இணைச்செயலாளர் சத்யா லட்சுமணன், மகளிர் அணி செரினா பாக்கியராஜ், நகர்மன்ற முன்னாள் தலைவர் மனோஜ்குமார், சாமுவேல், மாநகர மேற்கு பகுதி  அவைத்தலைவர் சந்தனம், ஞானபுஷ்பம், கேடிசி ஆறுமுகம், கேஏபி ராதா, மீனவர் அணி மாவட்ட பொருளாளர் அந்தோணியப்பா, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு  கல்வி குமார், லட்சுமணன், பொன்சிங், பொன்னம்பலம், தொப்பை கணபதி உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் வீரபாகு நன்றி கூறினார்.


Tags : Baswandana ,birthday party ,Anna ,AIADMK ,Thoothukudi ,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்