கஞ்சா விற்ற 4 பேர் கைது

கோவில்பட்டி, செப். 17:  கோவில்பட்டியில் கிழக்கு இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் எஸ்ஐ வேலுச்சாமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். இலுப்பையூரணி மறவர் காலனி அருகே மயான பகுதியில் சென்றபோது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த செண்பகாநகரை சேர்ந்த ராஜகோபால் மகன் வைரமணி (45), மறவர் காலனியை சேர்ந்த சுடலைமுத்து மகன் சுடலைராஜ் (21), வடக்கு இலுப்பையூரணியைச் சேர்ந்த நடராஜன் மகன்கள் மகேஷ்வரன் (31), கருத்தப்பாண்டி (28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம்  இருந்த 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.  பின்னர் 4 பேரையும்  கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: