மாவட்டத்தில் பரவலாக லேசான மழை

வேலூர், செப்.17: தமிழகத்தில் சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் பரவலான மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய ஆற்காடு, திருவலம், வாலாஜா, அணைக்கட்டு, குடியாத்தம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஆம்பூரில் 35.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்) : வேலூர்-3.1,, அரக்ேகாணம்-5.2, ஆலங்காயம்-3.2, வாணியம்பாடி-2, காவேரிப்பாக்கம்-7, வாலாஜா-4.4, சோளிங்கர்-9, ஆற்காடு-12.8, குடியாத்தம்-3, மேல்ஆலத்தூர்-2.2, பொன்னை-13.6, காட்பாடி ரயில் நிலையம்-4.8, அம்முண்டி-23, வடபுதுப்பட்டு-8.2.

Advertising
Advertising

Related Stories: