×

ஊசூர், இலவம்பாடி ஊராட்சியில்நிதி முறைகேடு செய்த 100 நாள் திட்ட பொறுப்பாளர்களுக்கு ₹8 ஆயிரம் அபராதம்

அணைக்கட்டு, செப். 17: ஊசூர், இலவம்பாடி ஊராட்சியில் நிதி முறைகேடு செய்த நூறுநாள் திட்ட பொறுப்பாளர்களுக்கு ₹8ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.அணைக்கட்டு தாலுகா ஊசூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் ₹12 லட்சத்தில் நீர் உறிஞ்சி கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்துவருகிறது. இதில் 2018-2019 நிதி ஆண்டின் 2ம் அரை ஆண்டிற்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம் நேற்று நடந்தது.சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மண்டல துணை பிடிஓ சிவகாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) நந்தகுமார் வரவேற்றார். களப்பணியாளர்கள் வெண்மதி, சத்யா ஆகியோர் தணிக்கை செய்தனர்.

அப்போது, தொடர்ச்சியாக பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பணியாளர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து, நூறு நாள் வேலை திட்டப்பணிகள் குறித்து சமூக தணிக்கை செய்ததில் பணியாளர்கள் வருகை பதிவேட்டில் ஒயிட்னர் பயன்படுத்தி திருத்தம் செய்து, நிதி முறைகேடு செய்ததற்காக திட்ட பொறுப்பாளர்களுக்கு ₹3,020 அபராதம் விதிக்கப்பட்டது.அதேபோல், அணைக்கட்டு ஒன்றியம் இலவம்பாடி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம கூட்டத்திற்கு சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் பாக்கியலட்சுமி வரவேற்றார். அப்போது ஒயிட்னர் பயன்படுத்தி திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதற்காக திட்ட பொறுப்பாளர்களுக்கு ₹5,630 அபராதம் விதிக்கபட்டது.இதேபோல் ஒதியத்தூர் ஊராட்சியிலும் சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் சித்திக்கான் தலைமையில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம் நேற்று நடந்தது.

Tags : project financiers ,
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்