அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக பணியிடங்களுக்கு 3 ஆண்டு பணி நீட்டிப்பு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்

வேலூர், செப்.17:அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக பணியிடங்களுக்கு 3 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ததமிழகத்தில் 2011-12ம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ஒரு தலைமையாசிரியர் மற்றும் 9 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வீதம் 1,000 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.இந்தப் பணியிடங்களுக்கு கடைசியாக 2018ம் ஆண்டு டிசம்பர் வரை தொடர்பு நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் முடிந்துவிட்டதை அடுத்து பணிநீட்டிப்பு காலம் 2021ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: