×

ஆந்திர மாநில பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு போலீஸ் எனக்கூறி நூதன முறையில்

திருவண்ணாமலை, செப்.15: திருவண்ணாமலையில் போலீஸ் எனக்கூறி கிரிவலம் வந்த ஆந்திர மாநில பெண்ணிடம் 7 சவரன் நகையை மர்ம ஆசாமி திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சம்பூர்ணம்(37). இவர் பவுர்ணமியையொட்டி நேற்றுமுன்தினம் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலை வந்தார். கிரிவலம் சென்ற போது காஞ்சி சாலையில் ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு ஹெல்மெட், ரெயின்கோட் அணிந்தபடி வந்த ஒரு மர்ம ஆசாமி சம்பூர்ணத்திடம் `நான் போலீஸ். இங்கு திருடர்கள் அதிகளவில் சுற்றி திரிகிறார்கள். அதனால் நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை என்னிடம் கொடுங்கள். பிறகு திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்துக்கு வந்து நகைகளை வாங்கிக்கொள்ளுங்கள் எனக் கூறினாராம். இதனால் சம்பூர்ணம் போலீஸ்காரர் தானே என எண்ணி தான் அணிந்திருந்த செயின், கம்பல் உள்ளிட்ட 7 சவரன் நகைகளை கழற்றி மர்ம ஆசாமியிடம் கொடுத்துள்ளார். நகைகளை வாங்கிய அந்த ஆசாமி அங்கிருந்து மாயமானார்.

பின்னர், சம்பூர்ணம் கிரிவலம் சென்று முடிந்தவுடன் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்துக்கு சென்று தான் கொடுத்த நகைகளை கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர்கள் `உங்கள் நகைகளை நாங்கள் யாரும் வாங்கவில்ைல'' என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சம்பூர்ணம் இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Andhra State Woman ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...