×

பெர்பெக்சுவல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு

நெல்லை, செப். 15: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இயங்கும் பெர்பெக்சுவல் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட  கலந்தாய்வு நெல்லையில் நடந்தது.  வெளிநாடுகளில் சென்று மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் படித்துவரும் மாணவர்களின் எண்ணிக்கை வளர்ந்துவரும் நிலையில் நடப்பு (2019- 20) கல்வியாண்டில் வெளிநாடுகளில் உயர்கல்வி பெற அனுமதி கடிதம் வழங்குவதற்கான காலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இயங்கும் பெர்பெக்சுவல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில விண்ணப்பித்த மாணவ,மாணவிகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நெல்லை கேடிசி நகரில் உள்ள பொதிகை அலுவலகத்தில் நடந்தது.

 இதில் பிளஸ் 2 தேர்வில் 91 சதவீத மதிப்பெண்ணும், ‘நீட்’  தேர்வில் 370 மதிப்பெண் பெற்ற கோவில்பட்டியை சேர்ந்த ஆசிரியை பெல்சியா கிரேஸ் - ஆபிரகாம் தம்பதியரின் மகள் சோபியா எபின் கோல்ட என்ற மாணவிக்கு பிலிப்பைன்ஸ் பெர்பெக்சுவல் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில்வதற்கான அனுமதி கடிதத்தை கேடிசி நகரை சேர்ந்த ஆசிரியர் ஜெடிடியா வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டியைச் சேர்ந்த கற்பகவள்ளி என்ற மாணவியின் பெற்றோர் கருப்பசாமி, டாக்டர் ஆனந்தராஜ்  உடனிருந்தார்.  மேலும் இந்தாண்டிற்க்கான மருத்துவ சேர்க்கை வரும் அக்டோபர் 27ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று இந்தியாவில் மருத்துவ இடம் கிடைக்காதவர்கள் மற்றும் வெளிநாடுகளின் மருத்துவம் படிக்க விரும்புவார்கள்  தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெறலாம் என பொதிகை அலுவலர் மாரிமுத்து கூறினார்.

Tags : Consultation ,Perfect Medical College ,
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...