தூத்துக்குடியில் எஸ்டிஆர் வெண்கல சிலை திறப்பு

தூத்துக்குடி, செப்.15:தூத்துக்குடியில் எஸ்டிஆர் மற்றும் அபி நிறுவனங்களின் தலைவர் தர்மராஜ் நாடார் முழு உருவ வெண்கல சிலையை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். தூத்துக்குடி எஸ்.டி.ஆர் மற்றும் அபி நிறுவனங்களின் நிறுவனர் எஸ்.தர்மராஜ் நாடார் என்ற எஸ்டிஆரின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முழு உருவ வெண்கல சிலை திறப்புவிழா எஸ்டிஆர் பள்ளி வளாகத்தில் நடந்தது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார்.

Advertising
Advertising

இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று எஸ்.தர்மராஜ் நாடார் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து பேசுகையில்,எஸ்.தர்மராஜ் நாடார் விவசாய குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பால் உயர்ந்தவர். மனிதநேயமிக்கவர், விவசாயிகளின் தோழனாக இருந்து மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபட்டவர். இறைபக்தி மிகுந்தவர். அவரது சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவரது மகன் விஜயசீலன் தமாகாவில் மாவட்ட தலைவராக இருப்பதால் மட்டும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. எஸ்டிஆர் குடும்பத்தில் ஒருவனாக இருப்பதாக நினைத்து பங்கேற்றுள்ளேன் என்றார்.

விழாவில் முன்னாள் பேராயர் ஜெ.ஏ.டி.ஜெபச்சந்திரன், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.பி., ஏ.டி.கே.ஜெயசீலன், டி.எஸ்.எப்.நிறுவனங்களின் தலைவர்கள் பால்பாண்டியன், துரைராஜ், தொழிலதிபர்கள் டி.ஏ.தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகர், விவேகம் ரமேஷ், ராஜ்குமார், ஜே.சி.ஐ.தலைவர் சுபா சுப்புராஜ், அரிமாசங்க தலைவர்கள் வக்கீல் ஸ்டேன்லிவேதமாணிக்கம், தர்மராஜ், பி.ஓ.பி.ராமசாமி, ஆலயமணி, ஒய்.எம்.சி.ஏ.தலைவர் ஆரோன், தமாகா மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாவட்ட தலைவர்கள் சுத்தமல்லி முருகேசன், கொட்டிவாக்கம் முருகன், எஸ்.சி.,எஸ்.டி.பிரிவு தலைவர் பாக்கியராஜ், மாநகர தலைவர் ரவிக்குமார், வடக்குமாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், அத்திமரப்பட்டி விவசாய சங்க தலைவர் அழகுராஜா, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை எஸ்டிஆர்.பொன்சீலன், எஸ்டிஆர்.விஜயசீலன், எஸ்டிஆர்.சாமுவேல்ராஜ் மற்றும் குடும்பத்தினர், எஸ்டிஆர், அபி நிறுவனங்களின் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: