அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 3நாட்கள் அதிமுக பொதுக்கூட்டங்கள் சண்முகநாதன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி, செப்.15:அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்குமாவட்ட அதிமுக சார்பில் இன்று முதல் 3 நாட்கள் தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. இதில் அமைச்சர் கடம்பூர்ராஜு பங்கேற்கிறார்.

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் அண்ணாவின் 111வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.
Advertising
Advertising

இன்று (15ம்தேதி) காலை 9.30 மணியளவில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மாலை 6 மணியளவில் தூத்துக்குடி வடக்குபகுதி ஸ்டேட்பாங்க் காலனி, சக்திவிநாயகர்புரம் அருகே பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் கடம்பூர்ராஜூ, அமைப்புச்செயலாளர் சின்னத்துரை, தலைமைக பேச்சாளர்கள் அணுகுண்டு பீர்முகமது, மதுரை வெடி சண்முகம் பேசுகின்றனர்.

நாளை (16ம்தேதி) திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் எதிரில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் ஜெ.பேரவை துணைச்செயலாளர் சேதுராமானுஜம், தலைமை பேச்சாளர் விஸ்வலிங்கம், நாஞ்சில் ஞானதாஸ் பேசுகின்றனர்.

17ம்தேதி ஆழ்வார்திருநகரி மாசி வீதியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபிரசாத், தலைமை பேச்சாளர்கள் தீப்பொறி முருகேசன், நாஞ்சில் மாதேவன் பேசுகின்றனர். இதில் முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பி, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி நிர்வாகிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள். இதில் ஊராட்சி, வட்ட கிளை நிர்வாகிகள், சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: