குலசையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்

உடன்குடி, செப்.15: குலசேகரன்பட்டினத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம் நிலவுவதால் அதனை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற  முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளன. தசரா திருவிழாவில் கலந்து கொள்வதற்கென ஏராளமான பக்தர்கள் வருவார்கள். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் இரவில் தங்குவார்கள்.

Advertising
Advertising

தற்போது குலசேகரன்பட்டினத்தின் பல பகுதிகளில் மின்கம்பங்கள் சிதிலமடைந்தும், முறையாக பராமரிப்பின்றி மின்வயர்கள் மிகவும் தாழ்வாகவும் செல்கின்றன. குறிப்பாக கருங்காளியம்மன் கோயில் பகுதியில் மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தரையில் இருந்து தொட்டு விடும் உயரத்திலேயே செல்கின்றன. விபத்து நிகழும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உடனடியாக உயர்த்திக்கட்ட மின்வாரிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜ மாவட்ட இளைஞரணி செயலாளர் ஐயப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் பொதுமக்களை திரட்டி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

Related Stories: