திருச்சியில் திமுக இளைஞரணி சேர்க்கை முகாம் கே.என்.நேரு துவக்கி வைத்தார்

திருச்சி, செப். 15: திருச்சியில் திமுக இளைஞரணி சேர்க்கை முகாமை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. சென்னையில் நடந்த முகாமை திமுக இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதுபோல் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நடந்த இளைஞரணி சேர்க்கை முகாமில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு விண்ணப்பங்களை வழங்கி துவக்கி வைத்தார். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இந்த முகாமில், மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

முசிறி: முசிறியில் நடந்த திமுக இளைஞரணி சேர்க்கை முகாமிற்கு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார்.  திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் முகாமை துவக்கி வைத்து விண்ணப்பங்களை வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: