×

முதல்வரின் கிராமப்புற வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம் விவசாயிகள் பயன் பெற அழைப்பு

வலங்கைமான், செப். 15: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திட்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஒரு ஊராட்சிக்கு நூறு விவசாயிகள் வீதம் தமிழக முதல்வரின் கிராமப்புற வீட்டு காய்கறி உற்பத்தி திட்டத்தின் கீழ் கீரை, வெண்டை, கத்தரி, முருங்கை, தக்காளி, பரங்கி உள்ளிட்ட ஏழுவிதமான விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் ஒரு கிலோ தொழு உரம் மற்றும் காய்கறி வளர்ப்புமுறை குறித்த துண்டு பிரசுரம் ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.விதைகள் உள்ளிட்ட இத்தொகுப்பினை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இத்திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் நிதிமாணிக்கம் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags : CM ,
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...