×

கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராததற்கு கல்லணைக் கால்வாய் சீரமைப்பு மேற்கொள்ளாததே காரணம்

பட்டுக்கோட்டை,செப்.15: பட்டுக்கோட்டை பயணியர் மாளிகையில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூரிலிருந்து கடந்த மாதம் 13ம் தேதியும், கல்லணையிலிருந்து 17ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கடைமடைப் பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் வந்து சேரவில்லை. கல்லணைக் கால்வாயின் தலைப்பில் 4000 கன அடி தண்ணீர் எடுக்கலாம்.

 தொடர்ந்து நபார்டு வங்கி மூலம் ரூ 300 கோடி மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாய் மறுசீரமைப்பு பணிகள் நடந்ததே. அதன் பிறகு அந்த பணி என்ன ஆயிற்று? என்று நிருபர்கள் கேட்டதற்கு, கடந்த திமுக ஆட்சியில் தலைவர் கருணாநிதி ஆலோசனையின்பேரில் நான் மத்திய நிதித்துறை இணையமைச்சராக இருந்தபோது கல்லணைக் கால்வாய் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 2011க்கு பிறகு வந்த அரசு அந்த பணிகளை தொடர்ந்து செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் இப்போது கடைமடை வரை முழு கொள்ளளவு தண்ணீர் சென்று சேர்ந்திருக்கும் என்றார்.

Tags : canal ,shops ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்